Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கனடாவில் இந்திய வம்சாவளியினர் போராட்டம்

சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கனடாவில் இந்திய வம்சாவளியினர் போராட்டம்

By: Nagaraj Mon, 27 July 2020 7:28:51 PM

சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கனடாவில் இந்திய வம்சாவளியினர் போராட்டம்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் போராட்டம்... சீனாவுக்கு எதிராக கனடாவில் இந்திய வம்சாவளியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.

வான்கூவரில் உள்ள சீன தூதரகம் அருகே இந்த தீவிர போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் இந்திய வம்சாவளியினர், கனடா திபெத் குழு மற்றும் திபெத்திய சமூகம், கனடா மற்றும் இந்தியா அமைப்பின் நண்பர்கள், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் அமைப்பு, வான்கூவர் சொசைட்டி, வான்கூவர் உய்குர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது அவர்கள் சீனாவுக்கு எதிராக பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பினர்.

china,opposition,people of indian descent,struggle ,சீனா, எதிர்ப்பு, இந்திய வம்சாவளியினர், போராட்டம்

கொரோனா பரவல் காரணமாக ஒவ்வொரு அமைப்பின் சார்பிலும் அதிகபட்சம் 50 நபர்கள் மட்டுமே போராட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சீனாவைச் சேர்ந்த ஹவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான மெங் வான்ஷோவை, அமெரிக்க வாரண்டின் அடிப்படையில் 2018ஆம் ஆண்டு கனடா அரசு கைது செய்தது. இதில் இருந்தே சீனாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் அதிகரிக்கத் தொடங்கியது. ஹவாய் அதிகாரி மெங் கைதுக்குப் பின்னர், உளவு பார்த்த குற்றச்சாட்டில் கனடாவைச் சேர்ந்த முன்னாள் தூதரக அதிகாரி மைக்கேல் கோவ்ரி மற்றும் தொழிலதிபர் மைக்கேல் ஸ்பேவர் ஆகியோரை சீனா கைது செய்தது.

சீனாவின் இந்த செயலைக் கண்டித்தும் சீன கம்யூனிஸ்ட் ஆட்சியின் விரிவாக்க கொள்கைகளை கண்டித்தும் கனடாவில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|