Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கிழக்கு மிட்னாப்பூரில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி

கிழக்கு மிட்னாப்பூரில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி

By: Nagaraj Mon, 10 July 2023 11:04:13 PM

கிழக்கு மிட்னாப்பூரில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி

மேற்கு வங்கம்: கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் போராட்டம் நடத்தியவர்கள், போலீசார் மீது கற்களை வீசியதால், அவர்களை தடியடி நடத்தி விரட்டி அடித்தனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி, பல இடங்களில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டு, மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததாகவும் வாக்குப்பெட்டிகளை பறித்து சென்றதாகவும் கூறி அவர்கள் குற்றம்சாட்டினர்.

polling station,tension,security forces,election commission,indifference ,வாக்குச்சாவடி, பதற்றம், பாதுகாப்பு படை, தேர்தல் ஆணையம், அலட்சியம்

கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் போராட்டம் நடத்தியவர்கள், போலீசார் மீது கற்களை வீசியதால், அவர்களை தடியடி நடத்தி விரட்டி அடித்தனர்.

பதற்றமான வாக்குச் சாவடிகள் குறித்த தகவல்களைக் கோரி பலமுறை கடிதங்கள் அனுப்பியும், மாநில தேர்தல் ஆணையம் அலட்சியமாக இருந்தது என்று மத்திய பாதுகாப்பு படை குற்றம்சாட்டியுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை மட்டுமே கடந்த 7-ம் தேதி கூறியதாகவும், அவை; எவை என்பதை தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

Tags :