Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொலம்பஸ் சிலையை உடைத்து ஆற்றில் வீசிய போராட்டக்காரர்கள்

கொலம்பஸ் சிலையை உடைத்து ஆற்றில் வீசிய போராட்டக்காரர்கள்

By: Nagaraj Mon, 06 July 2020 09:17:18 AM

கொலம்பஸ் சிலையை உடைத்து ஆற்றில் வீசிய போராட்டக்காரர்கள்

அமெரிக்காவில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் ஓயாத நிலையில், அந்நாட்டை உலகுக்கு அறிமுகப்படுத்திய கொலம்பஸின் சிலையை ஆர்பாட்டக்காரர்கள் தரையில் சாய்த்து உடைத்தனர்.

காவல்துறை அதிகாரியால் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்டு-இன் மரணத்துக்கு நீதி கோரி, பால்டிமோர் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அங்கு 30 ஆண்டு காலமாக இருந்த கொலம்பஸின் சிலையை கயிறால் இழுத்து கீழே சாய்த்தனர் ஆர்பாட்டக்காரர்கள்.

protesters,native americans,statue of columbus ,போராட்டக்காரர்கள், பூர்வக்குடி, அமெரிக்கர்கள், கொலம்பஸ் சிலை

பின்னர் அதன் உடைந்த பாகங்களை படாப்ஸ்கோ ஆற்றில் வீசி எறிந்தனர். கொலம்பஸின் வருகையை தொடர்ந்து நிகழ்ந்த ஸ்பானிய மன்னர்களின் படையெடுப்பால் ஏராளமான பூர்வக்குடி அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து, போராட்டக்காரர்கள் அவர் சிலையை உடைத்தனர்.

இதற்கு முன்பு இனவெறியை கண்டித்து நடந்த போராட்டங்களின் போது பல்வேறு சிலைகள் தகர்க்கப்பட்டன. அமெரிக்காவில் ஆரம்பித்த போராட்டங்கள் தற்போது பல்வேறு நாடுகளிலும் நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :