Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவின் சிகாகோ நகரில் சீனாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அமெரிக்காவின் சிகாகோ நகரில் சீனாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

By: Karunakaran Sat, 27 June 2020 12:00:27 PM

அமெரிக்காவின் சிகாகோ நகரில் சீனாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் சீனாவின் தான் முதன் முதலாக தோன்றியது. தற்போது சீனாவை விட இந்த கொரோனா வைரஸ் தாக்கம் பல நாடுகளில் அதிகமாகி வருகிறது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக பல உலக நாடுகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றன.

இந்தியாவுடனான லடாக் எல்லை பிரச்சினையில் சீனா அத்துமீறி தாக்குதல் நடத்திய சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள சீன தூதரகம் முன்பு இன்று சீனாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய தேசியக் கொடியை ஏந்தி வந்து இந்திய சமூகத்தினர் ஆர்பாட்டம் நடத்தினர்.

usa,china embassy,chicago,protest ,அமெரிக்கா, சீனா தூதரகம், சிகாகோ, எதிர்ப்பு

சீனாவைக் கண்டித்து முழக்கமிட்டு, சீனாவுக்கு எதிரான வாசகம் எழுதப்பட்ட அட்டைகளை ஏந்தி ஆர்பாட்டம் நடத்தினர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், சீனா அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பறிப்பதாகவும், வியட்நாம், தைவான், சிங்கப்பூர் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்துவதாகவும், தங்கள் பலத்தை காட்டி அனைத்து நாடுகளையும் மிரட்டுவதாகவும் சீனா மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

கொரோனா வைரஸ் விவகாரம் காரணமாக ஏற்கனவே சீனா மீது உலக நாடுகள் அதிருப்தியில் உள்ளன. தென் சீனக்கடல் விவகாரம், இந்தியாவுடனான லடாக் எல்லை பிரச்சினை உள்ளிட்டவை சீனாவுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்கா அதிபர் டிரம்ப் கொரோனா குறித்து சீனாவை நேரடியாக குற்றம்ச்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.



Tags :
|