Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு சீனா ஒப்புதல் அளித்ததை கண்டித்து ஹாங்காங்கில் போராட்டம்

தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு சீனா ஒப்புதல் அளித்ததை கண்டித்து ஹாங்காங்கில் போராட்டம்

By: Karunakaran Wed, 01 July 2020 12:43:39 PM

தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு சீனா ஒப்புதல் அளித்ததை கண்டித்து ஹாங்காங்கில் போராட்டம்

பல ஆண்டுகளாக சீனாவின் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜனநாயக உரிமைகள் கோரியும் ஹாங்காங் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்கும் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து, கடந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடித்தது.

இந்த போராட்டத்துக்கு அடிபணிந்த ஹாங்காங் நிர்வாகம் கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவை கைவிட்டது. இருப்பினும் ஹாங்காங் அரசியலில் சீனா தலையிடுவதை நிறுத்த வேண்டும், சுதந்திரமான தேர்தல், போலீசாரால் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை உடனடியாக விடுதலை செய்தல், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் குறித்து விசாரணை மேற்கொள்ளுதல் போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

hong kong,china,protest,national security law ,ஹாங்காங், சீனா, எதிர்ப்பு, தேசிய பாதுகாப்பு சட்டம்

இருப்பினும், ஹாங்காங் நிர்வாகத்தின் உதவியோடு ஜனநாயக ஆர்வலர்களின் இந்த தொடர் போராட்டத்தை சீனா இரும்பு கரம் கொண்டு ஒடுக்கியது. எதிர்காலத்தில் இது போல சீன எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதிசெய்ய ஹாங்காங்கில் புதிய தேசிய பாதுகாப்பு சட்டம் மசோதாவை கொண்டுவந்தது.

தற்போது, கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சர்ச்சைக்குரிய ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு சீனா நேற்று ஒப்புதல் அளித்தது. இதனால் தற்போது தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு சீனா ஒப்புதல் அளித்ததை கண்டித்து ஹாங்காங்கில் ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த புதிய சட்டம் பிரச்சினையை தூண்டுவதை தடுக்கும் என நம்புவதாக சீனாவின் நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஹாங்காங் பிரதிநிதி டாம் யுவு சூங் தெரிவித்துள்ளார்.

Tags :
|