Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மருந்து குறித்த விவரங்களை வழங்குங்கள்; பதஞ்சலி நிறுவனத்திடம் ஆயுஷ் அமைச்சகம் விளக்கம் கேட்கிறது

மருந்து குறித்த விவரங்களை வழங்குங்கள்; பதஞ்சலி நிறுவனத்திடம் ஆயுஷ் அமைச்சகம் விளக்கம் கேட்கிறது

By: Nagaraj Tue, 23 June 2020 8:57:46 PM

மருந்து குறித்த விவரங்களை வழங்குங்கள்; பதஞ்சலி நிறுவனத்திடம் ஆயுஷ் அமைச்சகம் விளக்கம் கேட்கிறது

கொரோனா சிகிச்சைக்காக தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் மருந்தின் பெயர் மற்றும் கலவை குறித்த விவரங்களை வழங்குமாறு பதஞ்சலி நிறுவனத்திடம் ஆயுஷ் அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது.

கொரோனா வைரஸுக்கென்று பிரத்யேக மருந்துகள் இல்லை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலமும் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பதன் மூலமும் மட்டுமே நோயை குணப்படுத்த முடியும் என்று உலகமே கூறிக்கொண்டிருக்கிறது.

அலோபதி மருத்துவம் தொடங்கி, சீனாவின் பாரம்பர்ய மருத்துவம், தமிழர்களின் சித்த மருத்துவம் என அனைத்தும் அதன் அடிப்படையிலேயே நோயாளிகளைக் கையாள்கின்றன. கொரோனா வைரஸின் தன்மையை சரியாகக் கணிக்க முடியாததால், தடுப்பு மருந்து கண்டறிவதிலும் பின்னடைவுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

patanjali institute,corona drug,profile,ministry of ayush ,
பதஞ்சலி நிறுவனம், கொரோனா மருந்து, விவரம், ஆயுஷ் அமைச்சகம்

இந்நிலையில், கொரோனாவுக்கே நேரடியாக மருந்து கண்டுபிடித்திருப்பதாகக் கூறி, அதை அறிமுகப்படுத்தவும் செய்திருக்கிறார், பிரபல யோகா குரு பாபா ராம்தேவ். அவருக்குச் சொந்தமான பதஞ்சலி நிறுவனத்தின் மூலம் 'கொரோனில் அண்ட் ஸ்வாசரி' (Coronil and Swasari) என்ற ஆயுர்வேத மருந்தை ஹரித்வாரில் இன்று அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

ஆயுர்வேத மருந்து அடங்கிய கிட் ரூ.545-க்கு கிடைக்கும். அந்தக் கிட்டில் 30 நாள்களுக்கான மருந்து இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்துக்குள் பதஞ்சலி ஸ்டோர்களில் இந்த மருந்து விற்பனைக்குக் கிடைக்கும். கொரோனா கிட் விநியோகத்தைக் கண்காணிக்கப்பதற்கென்று தனி மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ் பேசும்போது, இந்த மருந்தை கொரோனா நோயாளிகளுக்குக் கொடுத்து பரிசோதிப்பதற்காக அதிகாரிகளிடமிருந்து முறையாக அனுமதி பெறப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ஆயுர்வேதம், யோகா & இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகிய மருத்துவத்துக்கான ஆயுஷ் அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, உரிய பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் பதஞ்சலி நிறுவனம் அதனை கொரோனாவுக்கான மருந்து என விளம்பரப்படுத்தக்கூடாது என தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா சிகிச்சைக்காக தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் மருந்தின் பெயர் மற்றும் கலவை குறித்த விவரங்களை வழங்குமாறு பதஞ்சலி நிறுவனத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags :