Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சர்க்கஸ் கலைஞர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கல்

சர்க்கஸ் கலைஞர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கல்

By: Nagaraj Fri, 26 June 2020 8:02:29 PM

சர்க்கஸ் கலைஞர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கல்

நிவாரணப் பொருட்கள் வழங்கல்... திருவள்ளூர் அருகே சர்க்கஸ் செயல்படாததால் வருவாய்க்கு வழியின்றி அவதிக்குள்ளாகி வரும் 50 சாகச கலைஞர்களின் குடும்பத்திற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அரிசி மற்றும் மளிகை பொருள்களை ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் வழங்கினார்.

திருவள்ளூர் அருகே ஈக்காடு ஊராட்சியில் இந்தியன் சர்க்கஸ் கடந்த மார்ச் மாதம் முதல்வாரத்தில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து மார்ச் 24-ஆம் தேதிக்கு மேல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் கரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கத்தில் சர்க்கஸ் சர்க்கஸ் செயல்படாமல் போனது. இதனால் சர்க்கஸ் ஊழியர்கள் மற்றும் விலங்குகள் போதிய உணவு இன்றி தவித்து வந்தனர்.

இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தோர் மற்றும் அரசியல் கட்சியினர் நிவாரண பொருள்களை வழங்கி வந்தனர்.

circus artists,relief aid,food items,family ,
சர்க்கஸ் கலைஞர்கள், நிவாரண உதவி, உணவு பொருட்கள், குடும்பத்தினர்

இந்த நிலையில் வருவாய்க்கு வழியின்றி சர்க்கஸ் சாகச கலைஞர்கள் கூடாரம் அமைத்து அப்பகுதிலேயே தங்கியுள்ளனர். அதோடு, ஒவ்வொரு நாளும் உணவுக்கு மிகவும் சிரமப்படுவதாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு இன்று தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஈக்காடு பகுதிக்கு நேரில் சென்று ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அரிசி, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய், மளிகை பொருள்கள், முகக்கவசம், கிருமி நாசினி ஆகியவற்றை நேரில் சென்று வழங்கினார். இதேபோல், அந்த சர்க்கஸ் சாகச கலைஞர்களின் 50 குடும்பத்தினருக்கு உணவு பொருள்கள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து சாகச கலைஞர்கள் வேலையின்றி உணவும் இல்லாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் உணவு பொருள்கள் வழங்கி உதவிய ஆட்சியருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். உடன் கோட்டாட்சியர் ப்ரீத்தி பார்கவி, வட்டாட்சியர் விஜயகுமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :