கடந்த ஆண்டில் 50 ஆயிரம் இலவச மின் இணைப்புகள் வழங்கல்
By: Nagaraj Mon, 10 Apr 2023 8:26:51 PM
சென்னை: கடந்த ஆண்டில் 50 ஆயிரம் இலவச மின் இணைப்புகள் மின்வாரியத்தால் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசானது மக்களுக்கு பல சலுகைகளை வழங்கி கொண்டு வருகிறது. இதில் இலவச மின்சாரமும் ஒன்று. குடிசை வீடுகள், விவசாயத்திற்கு முழுதும் இலவசமாகவும், வீடுகளுக்கு, 100 யூனிட் வரை இலவசமாகவும், விசைத்தறி, வழிபாட்டு தலங்கள்,
இதனை அடுத்து கூட்டுறவு சங்கங்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. எனவே இதற்கென ஆகும் செலவினை அரசு மானியமாக வழங்கி கொண்டு வருகிறது.
கடந்த செப்டம்பரில் 10-ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் 2022-23- ம் ஆண்டில் அரசு 12,600 கோடி மானியமாக வழங்கியது. அதற்கு முந்தைய ஆண்டில் 8,932 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டது.
மேலும் கடந்த ஆண்டில் 50 ஆயிரம் இலவச மின் இணைப்புகள் மின்வாரியத்தால் வழங்கப்பட்டுள்ளது. எனவே நடப்பாண்டிற்கான 14 ஆயிரத்து, 430 கோடி மற்றும் 2021-22 ஆண்டுக்கான கூடுதல் மானியம், 232 கோடி ரூபாய் சேர்த்து 14,662 கோடி மானியமாக வழங்க அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.