Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அந்தந்த பள்ளிகள் அல்லது இணையதளம் மூலமாக 24 ஆம் தேதி பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அந்தந்த பள்ளிகள் அல்லது இணையதளம் மூலமாக 24 ஆம் தேதி பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

By: vaithegi Tue, 21 June 2022 6:34:02 PM

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அந்தந்த பள்ளிகள் அல்லது இணையதளம் மூலமாக 24 ஆம் தேதி பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகம்: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்த காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை.

இந்த ஆண்டு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்பதால் முன்கூட்டியே தேர்வு குறித்த தேதிகள் வெளியிடப்பட்டன. மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் திட்டமிட்டபடி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே மாதம் முதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில் மாணவர்களுக்கு நேற்று (ஜூன் 20 ) 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார். பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரபூர்வ இணையதளம் மூலமாக தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.

website,schools,school education ,இணையதளம் ,பள்ளிகள் ,பள்ளிக்கல்வித்துறை

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வரும் 24ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அந்தந்த பள்ளிகள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மாணவர்கள் பள்ளிகள் மூலமாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெறலாம் அல்லது http://dge.tn.nic.in என்ற இணையதளம் வாயிலாக சான்றிதழ்களை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் மறுகூட்டலுக்கு நாளை (ஜூன் 22) முதல் வரும் 29 ஆம் தேதி வரை பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. எனவே மாணவர்கள் பள்ளிகளை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags :