Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட்

வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட்

By: Nagaraj Sat, 22 Apr 2023 8:17:04 PM

வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட்

சிங்கப்பூர்: விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது... சிங்கப்பூர் நாட்டின் இரு செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து திட்டமிட்டபடி பிற்பகல் 2.19 மணிக்கு ராக்கெட் ஏவப்பட்டது.

satellite,maritime defence,lumilite,isro,chairman ,செயற்கை கோள்,  கடல் பாதுகாப்பு, லுமிலைட், இஸ்ரோ, தலைவர்

இஸ்ரோவின் வணிக அமைப்பான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் கீழ் டெலியோஸ் - 2, லுமிலைட் - 4 ஆகிய செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. திட்டமிட்டபடி இரு செயற்கைக் கோள்களும் ராக்கெட்டில் இருந்து பிரிந்து, சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

741 கிலோ எடை கொண்ட டெலியோஸ்-2 (TeLEOS-2) செயற்கைக்கோள் புவி கண்காணிப்பிற்காகவும், 16 கிலோ எடை கொண்ட லுமிலைட்-4 ((LUMILITE-4)) செயற்கைக்கோள் கடற்பாதுகாப்பிற்காகவும் அனுப்பப்பட்டன.

Tags :
|