Advertisement

வெற்றிகரமாக விண்ணில் பறந்த பிஎஸ்எல்வி-சி56 ராக்கெட்

By: Nagaraj Sun, 30 July 2023 10:48:31 PM

வெற்றிகரமாக விண்ணில் பறந்த பிஎஸ்எல்வி-சி56 ராக்கெட்

ஐதராபாத்: வெற்றிகரமாக விண்ணில் பறந்தது... ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சிங்கப்பூரின் 7 செயற்கைக்கோள்களை சுமந்தபடி பிஎஸ்எல்வி- சி56 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, வணிக ரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. அந்த வகையில் சிங்கப்பூருக்குச் சொந்தமான டிஎஸ்-சார் எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோ நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.

இந்த ராக்கெட் ஏவுவதற்கான இருபத்து ஐந்தரை மணி நேர கவுன்டவுன் முடிந்த நிலையில் திட்டமிட்டபடி இன்று காலை 6.30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இதில், முதன்மை செயற்கைகோளான டிஎஸ்-சார் செயற்கைக்கோள் இரவு, பகல் என அனைத்து பருவநிலையிலும் துல்லியமான படங்களை எடுத்து வழங்கும். இதனுடன் வெலாக்ஸ்-ஏஎம், ஆர்கேட் உட்பட 6 சிறிய செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட்டுள்ளன.

isro,flew in the sky,tirupati,etumalayan,victory ,இஸ்ரோ, விண்ணில் பாய்ந்தது, திருப்பதி, ஏழுமலையான், வெற்றி

360 கிலோ எடை கொண்ட DS-SAR செயற்கைக்கோள் சிங்கப்பூரின் பல்வேறு அரசு நிறுவனங்களுக்கு தேவையான செயற்கைக்கோள் படங்களை அனைத்து வானிலையிலும் துல்லியமாக அனுப்பும். சிங்கப்பூர் நாட்டின் செயற்கைகோளுடன், நியூஸ்பேஸ் இந்தியா என்ற தனியார் நிறுவனத்தின் ஆறு செயற்கைக்கோள்களும் விண்ணில் பாய்கின்றன.

இதற்கிடையே இஸ்ரோ அதிகாரிகள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிஎஸ்எல்வி சி56 (PSLV-C56) ராக்கெட் மாதிரியை வைத்து வழிபாடு நடத்தினர்.

Tags :
|