Advertisement

சைக்கோ கொலைகாரனின் கண் கண்ணாடி ரூ.1 கோடிக்கு ஏலம்

By: Nagaraj Sat, 08 Oct 2022 09:47:29 AM

சைக்கோ கொலைகாரனின் கண் கண்ணாடி ரூ.1 கோடிக்கு ஏலம்

அமெரிக்கா: ரூ. 1 கோடிக்கு ஏலம் போன கண் கண்ணாடி... அமெரிக்காவைச் சேர்ந்த சைக்கோ கொலைக்காரன் ஜெஃப்ரி டாஹ்மரின் கண் கண்ணாடி ஒரு கோடி ரூபாய்க்கு மேலாக விற்பனையாகியுள்ளது.


சீரியல் கில்லர்கள் குறித்த வெப்-சீரிஸ், திரைப்படங்கள், ஆவணப்படங்கள்தான் இணையத்தில் ஹிட் அடிக்கின்றன. மேலும், இதுபோன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் டிஆர்பி எகிறுகின்றன. இதுபோன்ற டிரெண்ட்கள் நல்லதா, கெட்டதா என்ற விவாதங்கள் ஒருபுறம் இருக்க, சைக்கோ கொலைக்காரர்கள் குறித்து தெரிந்துகொள்வதற்கும், அதுகுறித்த பொருள்களை வாங்கவும் லட்சக்கணக்காணோர் தங்களின் நேரத்தையும், பணத்தையும் செலவழிக்க தயாராக உள்ளனர்.


அந்த வகையில், அமெரிக்க சைக்கோ கொலைக்காரனான ஜெஃப்ரி டாஹ்மரின் கண் கண்ணாடி, சுமார் 1.2 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. கனடாவை சேர்ந்த டெய்லர் ஜேம்ஸ் எனும் பழம்பொருள் சேமிப்பாளர் ஒருவர் அந்த கண்ணாடியை விலைக்கு வாங்கியுள்ளார்.

review,serial killer,eyeglasses,auction,rs.1 crore,sequel ,
விமர்சனம், சீரியல் கில்லர், கண் கண்ணாடி, ஏலம், ரூ.1 கோடி, தொடர்

அந்த கண்ணாடி உள்பட கொலைக்காரன் டாஹ்மரின் பயன்படுத்திய ஸ்பூன், ஃபோர்க் போன்ற உபகரணங்கள், அவரின் பைபிள், குடும்ப புகைப்படங்கள், சில காகிதங்கள் ஆகியவற்றை டாஹ்மரின் தந்தையிடம் வேலைப்பார்த்த பணியாளர் ஒருவரிடம் இருந்து வாங்கியுள்ளார்.


இந்த பொருள்களுக்கான மதிப்பு தற்போது உயர்ந்துள்ளதால், அவற்றை சேமித்தும், மற்றவர்களுக்கு விற்றும் வருகிறார். இதற்கெல்லாம், முதன்மையான காரணம் நெட்பிளிக்ஸில் கடந்த மாதம் 21ஆம் தேதி வெளியான 'மான்ஸ்டர்' வெப்சீரீஸால் தான்.

ஜெஃப்ரி டாஹ்மர் குறித்த இந்த வெப்சீரிஸ் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தாலும், பெரும்பாலும் எதிர்மறை எண்ணைத்தை தான் இந்த தொடர் தூண்டுகிறது என விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது.

Tags :
|