Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கான பொது கலந்தாய்வு இன்று தொடக்கம்

தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கான பொது கலந்தாய்வு இன்று தொடக்கம்

By: vaithegi Tue, 25 July 2023 10:06:20 AM

தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கான பொது கலந்தாய்வு இன்று தொடக்கம்

சென்னை: கலந்தாய்வு இன்று ஆன்லைனில் தொடக்கம் ..... மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாணவர்கள் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொள்ள விண்ணப்பித்தனர்.

இதனை அடுத்து விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தரவரிசை பட்டியல் கடந்த 16ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், அரசு ஒதுக்கீட்டில் சுமார் 25,856 பேரும் நிர்வாக ஒதுக்கீட்டில் 13 ஆயிரத்து 179 பேரும், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடங்களுக்கு 2993 பேரும் இடம்பெற்று உள்ளனர்.

general counseling,mbbs,bds , பொது கலந்தாய்வு, எம்பிபிஎஸ் ,பிடிஎஸ்


இந்த நிலையில் தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. காலை 10 மணி முதல் வருகிற 31-ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதற்கு https://tnmedicalselection.net/ என்ற இணையதளம் மூலமாக மாணவர்கள் கலந்து கொள்ளலாம். ஆகஸ்ட் 1-ம் மற்றும் 2-ம் தேதிகளில் தரவரிசை பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்படும்.

அதைதொர்ந்து 3-ம் தேதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். 8-ம் தேதி மாலை 5 மணிக்குள் இட ஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் மாணவர்கள் சேர வேண்டும் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நேர்முக கலந்தாய்வு 27-ம் தேதி நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags :
|