Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 9 விரைவு ரயில்கள் நிற்க நடவடிக்கை எடுக்க ... பொதுமக்கள் கோரிக்கை

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 9 விரைவு ரயில்கள் நிற்க நடவடிக்கை எடுக்க ... பொதுமக்கள் கோரிக்கை

By: vaithegi Fri, 03 Mar 2023 12:34:33 PM

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 9 விரைவு ரயில்கள் நிற்க நடவடிக்கை எடுக்க ...  பொதுமக்கள் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் முக்கியமான தொழில் நகரங்களில் ஒன்றாக சென்னை இருக்கிறது. வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்ற பெயருக்கு ஏற்றார் போல, வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களும் சென்னைக்கு குடிபெயர்ந்து அங்கு இயங்கி வரும் தொழில் நிறுவனங்களில் பணி புரிந்து கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னைக்கு அருகே உள்ள முக்கியமான தொழில் நகரங்களில் ஒன்றாக திருவள்ளூர் அமைந்துள்ளது. இங்கே பல கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு கொண்டு வருகின்றன. அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையும் திருவள்ளூரில் அமைந்துள்ளது.மேலும் சென்னையில் வசித்து வருபவர்கள் கல்விக்காகவும், வேலை வாய்ப்பிற்காகவும் திருவள்ளூர் நகரத்திற்கு மாறி கொண்டு இருக்கின்றனர். சுமார் 200 தொழில் நிறுவனங்கள் காக்களூர் தொழில்பேட்டையில் இருக்கின்றன.

public,trains ,பொதுமக்கள் ,ரயில்கள்


இதையடுத்து சென்னையின் மிகப்பெரிய தொழிற்பேட்டையான ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பேட்டை திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. 2011-ம் ஆண்டு கணக்கின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 37 லட்சம் மக்கள் இருக்கின்றனர். அதனால் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்றார் போன்று ரயில் போக்குவரத்து வசதியை நிர்வாகம் வழங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்கள்.

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 180 புறநகர் மின்சார ரயில்கள், 11 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்கின்றன. மேலும் ரயில் நிலையத்தில் 6 நடைமேடைகள் இருக்கின்றன. இந்நிலையில் மக்களின் வசதிக்காக திருவள்ளூரில் சென்னை – மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ், சென்னை – பெங்களூர் லால்பாக் எக்ஸ்பிரஸ், சென்னை- கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், சென்னை – திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், செங்கல்பட்டு காச்சேகுட எக்ஸ்பிரஸ், சென்னை – பெங்களூரு பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், சென்னை – மும்பை எல்டிடி எக்ஸ்பிரஸ், சென்னை – பெங்களூரு வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ், ஆகிய 9 ரயில்கள் நிற்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

Tags :
|