Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு பேருந்துகளில் திடீரென பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி

அரசு பேருந்துகளில் திடீரென பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி

By: vaithegi Thu, 13 July 2023 2:25:49 PM

அரசு பேருந்துகளில் திடீரென பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி



சென்னை: திருநெல்வேலியிலிருந்து தென்காசிக்கு செல்லும் அரசு பேருந்துகளில் திடீரென பேருந்து கட்டணம் அதிகரிப்பு ... திருநெல்வேலியிலிருந்து பழைய பேட்டை செல்லும் வழியில் அமைந்துள்ள கண்டியப்பேரி இசக்கியம்மன் கோயில் அருகே வாய்க்கால் பழுதடைந்து இருக்கும் நிலையில் புது பாலம் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று கொண்டு வருகிறது.

இந்த நிலையில், திருநெல்வேலியிலிருந்து தென்காசி செல்லும் கார், பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் அனைத்தும் மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

அதாவது, திருநெல்வேலியிலிருந்து தென்காசி செல்லும் பேருந்துகள் அனைத்தும் திருநெல்வேலியின் புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருநெல்வேலி சந்திப்பு, திருநெல்வேலி டவுன், தெற்கு மவுண்ட் சாலை, tvs கார்னர், கோடீஸ்வரன் நகர், திருப்பணி, கரிசல்குளம் விலக்கு, EB அலுவலகம் மற்றும் பழைய பேட்டை வழியாக தென்காசி செல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

public,government bus ,பொதுமக்கள் , அரசு பேருந்து

இதே போன்று தென்காசியிலிருந்து திருநெல்வேலிக்கு செல்லவும் புதிய மாற்றுப்பாதை ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், பேருந்து மாற்று வழித்தடத்தின் மூலமாக இயக்கப்படுவதால் பேருந்து கட்டணம் ரூ. 2 அதிகரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் புதிய பாலம் அமைக்கும் வரை பொதுமக்கள் அரசு போக்குவரத்து கழகத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்கும்படி அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.

Tags :
|