Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் நடைபெற இருந்த பொதுத்தேர்வுகள் ரத்து - முதலமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் நடைபெற இருந்த பொதுத்தேர்வுகள் ரத்து - முதலமைச்சர் அறிவிப்பு

By: Monisha Tue, 09 June 2020 12:49:34 PM

தமிழகத்தில் நடைபெற இருந்த பொதுத்தேர்வுகள் ரத்து - முதலமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கத்தால் அனைத்து துறைகளும் முடங்கியது. அதே போல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 15-ந்தேதி நடைபெற இருப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஆசிரியர் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை வருகிற 11-ந் தேதிக்கு சென்னை ஐகோர்ட்டு ஒத்திவைத்து இருக்கிறது. கொரோனாவின் தாக்கம் அதிகரித்து இருக்கும் இந்த சூழ்நிலையில், பொதுத்தேர்வை இப்போது நடத்த வேண்டுமா? என அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

tamil nadu,coronavirus,public exam,cancellation,edappadi palanisamy ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பொதுத்தேர்வு,ரத்து,எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் இன்றும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பின்போது பொதுத்தேர்வு குறித்தும், பள்ளிகள் திறப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்குதலை அடுத்து தமிழகத்தில் நடைபெற இருந்து பொதுத்தேர்வுகளை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.

Tags :