Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் அச்சம்

சென்னையில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் அச்சம்

By: vaithegi Fri, 10 Feb 2023 6:52:45 PM

சென்னையில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் அச்சம்

சென்னை: மருத்துவர் அறிவுரை .... தமிழகத்தில் இந்தாண்டு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. அதிகபட்சமாக சென்னையில் கனமழை காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்கியது. பருவமழை முடிவடைந்த நிலையில் தற்போது கடுமையான குளிர் நிலவி கொண்டு வருகிறது. அதனால் சென்னையில் பலருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் இடையே அச்சம் நிலவி வருகிறது. இது பற்றி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.

அதில் ஆண்டுதோறும் மாறுபடும் தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக வைரஸ்கள் தங்களுடைய நிலையை மாற்றிக் கொள்வதால் தான் இது போன்ற காய்ச்சல் ஏற்படுவதாக அவர் தெரிவித்தார். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தினமும் 12 ஆயிரம் புறநோயாளிகள் வந்தாலும்கூட காய்ச்சல் பாதிப்புகளால் வருவோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இது சாதாரண ஃப்ளு காய்ச்சலுக்கான அறிகுறியாக மட்டும் தான் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

public,fever ,பொதுமக்கள் ,காய்ச்சல்

இருந்த போதிலும் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் மருந்து கொடுத்து பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் எனவும், பொதுமக்கள் இந்த காய்ச்சலால் அச்சப்பட தேவை இல்லை

மேலும் காய்ச்சல் சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை சந்தித்து தகுந்த ஆலோசனையின் படி மருந்து உட்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் மூச்சுவிடும் எண்ணிக்கை அதிகமானாலும், நினைவாற்றல் குறையும்போதும், இடைவிடாத காய்ச்சல் போன்ற நேரங்களில் மட்டும் அவசியம் மருத்துவரை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

Tags :
|