Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தொடர் விடுமுறை .. தனியார் பேருந்து கட்டணங்கள் குறித்து பொதுமக்கள் அச்சம்

தொடர் விடுமுறை .. தனியார் பேருந்து கட்டணங்கள் குறித்து பொதுமக்கள் அச்சம்

By: vaithegi Thu, 19 Oct 2023 1:28:49 PM

தொடர் விடுமுறை .. தனியார் பேருந்து கட்டணங்கள் குறித்து பொதுமக்கள் அச்சம்


சென்னை: அதிகரிக்கும் பேருந்து கட்டணத்தால் தவிக்கும் பொதுமக்கள் .... தமிழகத்தில் வார இறுதி விடுமுறை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்கள் சமயத்தில் வழக்கத்தை விட அதிகமான சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகிறது. எனினும் கடைசி நேரத்தில் பயணத்தை திட்டமிட்டு பயணிக்கும் மக்கள் அதிக பாதிப்பை இச்சமயங்களில் சந்தித்து கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வாரம் வரும் அக்டோபர் 21ஆம் தேதி சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை 23ஆம் தேதி வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்ட உள்ளது. சனி மற்றும் ஞாயிறு வழக்கமான விடுமுறை, திங்கள் & செவ்வாய் விஜயதசமி & ஆயுத பூஜை விடுமுறை நாட்கள் ஆகும்.

public,serial holiday. private bus fares ,பொதுமக்கள் ,தொடர் விடுமுறை.தனியார் பேருந்து கட்டணங்கள்


எனவே இதற்காக தமிழக அரசு கூடுதல் பேருந்துகளை இயக்க திட்டமிட்டு உள்ள போதிலும் கடைசி நேர பயணிகள் தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணங்களை செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

தனியார் பேருந்து கட்டண விவகாரம் குறித்து அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்துள்ள போதிலும், பயணிகளின் அவசர நிலையை பயன்படுத்தி இவர்கள் கூடுதல் கட்டுணத்தை வசூலிப்பது தொடர்கதையாகி வருகிறது. இதையடுத்து இனி வர உள்ள விடுமுறை நாட்கள் சமயத்தில் பேருந்து கட்டணம் குறித்து பொதுமக்கள் மத்தியில் தற்போதையிலிருந்து அச்சம் ஏற்பட தொடங்கியுள்ளது.

Tags :
|