Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

தமிழகத்தில் டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

By: vaithegi Thu, 24 Aug 2023 11:17:45 AM

தமிழகத்தில் டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னை: கேரள மாநிலத்தில் டெங்குகாய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளது. இதனை அடுத்து அதன் தாக்கத்தாலும், தமிழகத்தில் பெய்துவரும் மழையாலும் தமிழகத்தில் டெங்கு பரவல் உயர்ந்து கொண்டே வருகிறது.

இந்த ஆண்டில் இதுவரை தமிழகத்தில் மட்டும் 3,658 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 329 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் தற்போது 268 பேர் அரசுமற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.

அதனால், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறும், சிகிச்சைக்கான மருந்துகளை போதியஅளவில் இருப்பு வைக்குமாறும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

dengue prevention mission,public health department ,டெங்கு தடுப்பு பணி,பொது சுகாதாரத்துறை


இதனை அடுத்து இதுதொடர்பாக தமிழக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகத்திடம் கேட்டபோது, “கடந்தாண்டைவிட, இந்தாண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்து உள்ளது. தொடர்ந்து, கொசு ஒழிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

டெங்கு,சிக்குன்குனியா உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பாதிப்பு கண்டறியும் இடங்களில் தீவிர தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது” என அவர் கூறினார்.

Tags :