Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உயரும் டெங்கு பரவல் .. பொது சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை

உயரும் டெங்கு பரவல் .. பொது சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை

By: vaithegi Fri, 22 Sept 2023 3:30:09 PM

உயரும்  டெங்கு பரவல்  ..  பொது சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே டெங்கு காய்ச்சல் பரவல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. டெங்கு பாதிப்பினால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலையை உண்டாக்கியது.

இதனால் தமிழகம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தமிழக பொது சுகாதார இயக்குனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.இதையடுத்து அதில், பொது சுகாதார விதிகளின் படி அறிவிக்கப்பட்ட டெங்கு காய்ச்சல் கொசுக்களினால் பரவுகிறது.

department of health,dengue ,சுகாதாரத்துறை ,டெங்கு

எனவே மருத்துவர்கள் அனைவரும் தங்களிடம் சிகிச்சை பெறும் நபர்களுக்கு டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், கொசு உற்பத்தியை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் பொதுமக்கள், நிறுவனங்கள், கடை, நில உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்களுக்கு ரூ. 5,00 அபராதம் விதிக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :