Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அலபாமாவில் ஜூன்டீன்த் நினைவு தினத்தை முன்னிட்டு (ஜூன் 20) ஆம் தேதியன்று ......பொது விடுமுறை

அலபாமாவில் ஜூன்டீன்த் நினைவு தினத்தை முன்னிட்டு (ஜூன் 20) ஆம் தேதியன்று ......பொது விடுமுறை

By: vaithegi Wed, 15 June 2022 1:32:28 PM

அலபாமாவில் ஜூன்டீன்த் நினைவு தினத்தை முன்னிட்டு (ஜூன் 20) ஆம் தேதியன்று ......பொது விடுமுறை

அமெரிக்கா: ஜுன்டீன்த் என்பது அமெரிக்காவில் அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் விடுதலையை நினைவு கூரும் ஒரு கூட்டாட்சி விடுமுறையாகும். இந்நிகழ்வானது ஆப்பிரிக்க-அமெரிக்க மக்களின் கலாச்சாரத்தை கொண்டாடுவதற்காகவும் அனுசரிக்கப்படுகிறது. முதலாவதாக டெக்சாஸில் உள்ள கால்வெஸ்டனில் தோன்றிய இந்த ஜுன்டீன்த் நினைவு தினம் காலப்போக்கில் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கடைபிடிக்கப்பட்டது.

அந்த வகையில் இந்த ஆண்டு ஜுன்டீன்த் நினைவு தினத்தை முதல் முறையாக கொண்டாடும் 40வது மாநிலமாக அமெரிக்காவின் தென்கிழக்கு நகரமான அலபாமா மாறி இருக்கிறது

இந்த ஆண்டு ஜூன்டீன்த் நினைவு தினத்தை முன்னிட்டு அலபாமாவில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அலபாமாவின் கவர்னர் கே ஐவி இம்மாத தொடக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்த ஆண்டு ஜூன்டீன்த் நினைவு தினம் ஜூன் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனால் இவ்விழா ஜூன் 20 ஆம் தேதி அன்று கடைப்பிடிக்கப்பட இருக்கிறது. இதை கவனத்தில் கொண்டு அலபாமாவில் உள்ள அனைத்து அலுவலகங்கள் மூடப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

junteenth liberation,culture ,ஜூன்டீன்த் விடுதலை,கலாச்சாரம்

இதற்கிடையில், அலபாமா சட்டம் ஜூன்டீன்த் தினத்தை தவிர மற்ற விடுமுறை நாட்களை நிரந்தர அரசு விடுமுறைகளாக அங்கீகரிக்கிறது. அந்த வகையில் அலபாமாவில் மூன்று மாநில கூட்டமைப்பு தொடர்பான விடுமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது.

அதன்படி ஏப்ரலில் கான்ஃபெடரேட் மெமோரியல் தினத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள அலுவலகங்கள் மூடப்படும். அதே போல ஜூன் மாதத்தில் வரும் கூட்டமைப்பு தலைவர் ஜெபர்சன் டேவிஸின் பிறந்த நாளை முன்னிட்டும், ஜனவரியில் கொண்டாப்படும் லீ டே மற்றும் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டும் விடுமுறைகள் கடைபிடிக்கப்படும் என அறிவித்துள்ளது.

Tags :