Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாகிஸ்தானில் ஜூலை 8ம் தேதி முதல் அடுத்த 5 நாட்களுக்கு பொது விடுமுறை

பாகிஸ்தானில் ஜூலை 8ம் தேதி முதல் அடுத்த 5 நாட்களுக்கு பொது விடுமுறை

By: vaithegi Mon, 04 July 2022 3:23:59 PM

பாகிஸ்தானில்  ஜூலை 8ம் தேதி முதல் அடுத்த 5 நாட்களுக்கு பொது விடுமுறை

பாகிஸ்தான் : இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் வரும் ஜூலை 8 முதல் ஜூலை 12 வரை கொண்டாடப்பட இருக்கும் ஈதுல் அஜாவை முன்னிட்டு 5 நாட்கள் பொது விடுமுறைக்கு பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன்மூலம் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள கடிதத்தின்படி, ஈதுல் அஸ்ஹா பண்டிகையை முன்னிட்டு வரும் ஜூலை 8ம் தேதி முதல் அடுத்த 5 நாட்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்படும் என பிரதமரின் இந்த ஒப்புதலுக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள அமைச்சரவை செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

public holiday,pakistan ,பொது விடுமுறை ,பாகிஸ்தான்

இதற்கு முன், ஈத் விடுமுறைகள் தொடர்பான சுருக்கத்தை அமைச்சரவைப் பிரிவு, பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி இருந்தது. இதனை கவனத்தில் கொண்ட பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் 5 நாட்கள் பொது விடுமுறைக்கு தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும், ஜில்ஹாஜ் நிலவு தென்படாததால் ஈதுல் அஸ்ஹா ஜூலை 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் என மத்திய ரூட்-இ-ஹிலால் குழுத் தலைவர் மௌலானா அப்துல் கபீர் ஆசாத் அவர்கள் அறிவித்துள்ளார்.

Tags :