Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெங்கு பாதிப்பை நிலையை தக்க வைக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்; டாக்டர் சி.விஜயபாஸ்கர்

டெங்கு பாதிப்பை நிலையை தக்க வைக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்; டாக்டர் சி.விஜயபாஸ்கர்

By: Monisha Fri, 06 Nov 2020 09:17:28 AM

டெங்கு பாதிப்பை நிலையை தக்க வைக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்; டாக்டர் சி.விஜயபாஸ்கர்

சென்னை எழும்பூர் குழந்தைகள் அரசு நல மருத்துவமனையில் ரூ.4 கோடி மதிப்பில் நவீன 128 கூறு சி.டி. ஸ்கேன் கருவி புதிதாக நிறுவப்பட்டுள்ளது. இந்த கருவியை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் இதுவரை கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 1,100 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 64 ஆயிரத்து 193 குழந்தைகள் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடைகளில் விற்பனையாளர் மற்றும் வாடிக்கையாளர் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.

dengue,public,health,minister,c. vijayabaskar ,டெங்கு,பொதுமக்கள்,சுகாதாரத்துறை,அமைச்சர்,சி.விஜயபாஸ்கர்

பண்டிகை காலங்களில் முதியவர்கள், குழந்தைகள், சிறுவர்களை கடைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இளைஞர்கள் முககவசம் அணிந்து கடைகளுக்கு செல்லலாம். இதன் மூலம் தொற்று பரவுவதை தடுக்க முடியும்.

இ-சஞ்சீவினி இணையதளத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பயன் பெற்றுள்ளனர். இ-சஞ்சீவினி பயன்பாட்டில் தொடர்ந்து தமிழகம் முதல் இடம் வகித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளுடன், மற்ற தொற்று நோய் தடுப்பு பணிகளையும் களப்பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு(2019) அக்டோபர், நவம்பர், டிசம்பரை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 15 மடங்கு டெங்கு பாதிப்பு குறைவாக உள்ளது. இந்த நிலையை தக்க வைக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|
|
|