Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் அதிகரித்த மின் கட்டணம் .. அதிர்ச்சியில் பொதுமக்கள்

தமிழகத்தில் அதிகரித்த மின் கட்டணம் .. அதிர்ச்சியில் பொதுமக்கள்

By: vaithegi Tue, 22 Nov 2022 7:12:10 PM

தமிழகத்தில் அதிகரித்த மின் கட்டணம்   ..    அதிர்ச்சியில் பொதுமக்கள்

சென்னை: அதிர்ச்சியில் பொதுமக்கள் .... தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மின் கட்டணம் 34 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. தற்போது மின் வாரியம் கடனில் இருந்து மீள மின் கட்டண உயர்வு அவசியம் என தமிழக அரசு தெரிவித்தது. அதனால் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் மின் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தது. கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது ஒரு யூனிட்டுக்கு ரூ.8 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் 2027 ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வால் தமிழக மின் வாரியத்திற்கு ஆண்டுக்கு ரூ.15,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

electricity bill,public , மின் கட்டணம்   ,பொதுமக்கள்

இதையடுத்து தமிழக மக்கள் 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தும் போது கட்டணமாக ரூ.2000 செலுத்தும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.மேலும் வாடகை வீடுகளில் தங்கியிருக்கும் மக்கள் மின் கட்டண உயர்வால் பொருளாதார ரீதியாக சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதனை அடுத்து கடந்த செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தின் தாக்கம் இப்போது தான் தெரிகிறது. தற்போது AC உள்ளிட்ட மின் சாதனங்கள் பயன்படுத்தும் வீடுகளில் மின் கட்டணம் ரூ.5000 முதல் 10,000 வரை செலுத்த வேண்டிய நிலை ஒன்று உருவாகியுள்ளது.

Tags :