Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் 31ம் தேதி வரை தமிழகத்தில் பொது போக்குவரத்துக்கு தடை

வரும் 31ம் தேதி வரை தமிழகத்தில் பொது போக்குவரத்துக்கு தடை

By: Nagaraj Mon, 13 July 2020 9:34:59 PM

வரும் 31ம் தேதி வரை தமிழகத்தில் பொது போக்குவரத்துக்கு தடை

வரும் 31ம் தேதி வரை பொது போக்குவரத்துக்கு தடை... கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக வரும் ஜுலை 31ம் தேதி வரையில் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ்‌ நோய்த்‌ தொற்றை தடுப்பதற்காக, பேரிடர்‌ மேலாண்மைச்‌ சட்டத்தின்‌ கீழ்‌, 24.3.2020 முதல்‌ தமிழ்நாடு முழுவதும்‌ ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத்‌ தொடர்ந்து கொரோனா தொற்றின்‌ நிலைமையை கருத்தில்‌ கொண்டும்‌, மக்களின்‌ வாழ்வாதாரத்தை கருத்தில்‌ கொண்டும்‌, சில தளர்வுகளுடன்‌ 31.7.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

corona virus,chennai,government of tamil nadu,bus service ,கொரோனா வைரஸ், சென்னை, தமிழக அரசு, பேருந்து சேவை

கொரோனா வைரஸ்‌ நோய்த்‌ தொற்றை தடுக்க அரசு, தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில்‌ மேற்கொண்டு வரும்‌ நிலையில்‌, கொரோனா நோய்த்‌ தொற்று பரவலை கட்டுப்படுத்தும்‌ நோக்குடன்‌, மாநிலத்தில்‌ தனியார்‌ மற்றும்‌ அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை 1.7.2020 முதல்‌ 15.7.2020 வரை நிறுத்தப்பட்டது.

தற்போது, தமிழ்நாட்டில், கொரோனா நோய் தொற்றை தொடர்ந்து கட்டுப்படுத்தும் நோக்குடன் 31.7.20 முடிய தனியார் மற்றும் அரசு பொது போக்குவரத்து சேவை இயக்கப்படாது.

தமிழ்நாடு அரசின்‌ கொரோனா வைரஸ்‌ நோய்‌ தொற்று தடுப்புநடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்‌ முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :