Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவிப்பு

By: vaithegi Wed, 16 Nov 2022 12:34:21 PM

தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவிப்பு

சென்னை: தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மாதங்கள் மழை காலம் என்பதால் இந்த நேரத்தில் அதிகம் நோய்களும் பரவி கொண்டு வருகிறது. கடந்த மாதங்களில் பெய்த மழையால் இன்புளுயன்சா காய்ச்சல் பரவியது.

இதனால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் டெங்கு காய்ச்சல் அச்சமும் நிலவியது.அதை தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் தற்போது வடகிழக்கு பருவமழை வேகமெடுத்துள்ளது.

minister of public welfare,fever ,மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ,காய்ச்சல்

சாலைகளில் மழை நீரும் கழிவு நீரும் கலந்து தொற்றுநோய் பரவலுக்கு வழி வகுத்துள்ளது.இதையடுத்து இந்த நிலையில் முன்னெச்சரிக்கையாக தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மொத்தமாக 48,187 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சென்னையில் மட்டும் 3,562 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் வாயிலாக சென்னையில் மட்டும் 76 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து டெங்கு பரவும் அபாயம் இருப்பதால் சென்னையில் கொசுவை ஒழிப்பதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Tags :