Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் திறப்பு குறித்து அறிவிப்புகள் வெளியீடு

தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் திறப்பு குறித்து அறிவிப்புகள் வெளியீடு

By: vaithegi Thu, 06 Oct 2022 3:07:10 PM

தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் திறப்பு குறித்து அறிவிப்புகள் வெளியீடு

ன்னை: பள்ளிகளின் திறப்பு குறித்து அறிவிப்புகள் வெளியீடு .... தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் செப்டம்பர் மாதத்தில் காலாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டது. அக்டோபர் 1 முதல் 9ம் தேதி வரை அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் உள்ள 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கும், அக். 1 முதல் 5ம் தேதி வரை 5 நாட்கள் மட்டும் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து அரசு நடத்தும் எண்ணும் எழுத்தும் பயிற்சியில் ஆசிரியர்கள் அக் 10 முதல் 12ம் தேதி வரை கலந்து கொள்ள இருப்பதால், அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளியை சேர்ந்த 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 13ம் தேதி தான் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

school,cbse ,பள்ளி ,சிபிஎஸ்இ

ஆனால் தமிழகத்தில் தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் திறப்பு குறித்து தற்போது புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் அனைத்தும் அக் 10ம் தேதி திறக்கப்பட வேண்டும் என திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் வெளியூர் சென்ற மாணவர்கள் மீண்டும் அவசர கதியில் சொந்த ஊர்களுக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதேபோல், சிபிஎஸ்இ பள்ளிகள் முன்னதாக அக்டோபர் 6ம் தேதியான இன்று திறக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தனியார் பள்ளிகள் அக்டோபர் 10 தேதி தான் திறக்கப்படும் என்று வெளியான அரசின் அறிவிப்பால் குழப்பம் ஏற்பட்டது. ஆனால், அரசின் அறிவிப்பு தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு தான் பொருந்தும் என்றும், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு பொருந்தாது என கூறி திட்டமிட்ட படி தமிழகத்தில் சிபிஎஸ்இ பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.



Tags :
|