Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிசம்பர் மாத வங்கிகளின் விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியீடு

டிசம்பர் மாத வங்கிகளின் விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியீடு

By: vaithegi Wed, 22 Nov 2023 6:06:36 PM

டிசம்பர் மாத வங்கிகளின் விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியீடு


இந்தியா: 24 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை ..... இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி கொண்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தாண்டிற்கான கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் வங்கிகள் எத்தனை நாட்கள் மூடப்படும் என்பது பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன் படி டிசம்பர் மாதம் வங்கிகள் 6 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதால் விடுமுறை ஆகும். அதே போன்று பொது விடுமுறை, வார இறுதி நாட்கள் என டிசம்பர் மாதம் 24 நாட்கள் வங்கிகள் மூடப்பட இருக்கிறது. அது குறித்த விவரங்கள் இதோ,

வேலை நிறுத்த விடுமுறை நாட்கள்:

டிசம்பர் 4: பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, பாரத ஸ்டேட் வங்கி (SBI) விடுமுறை ஆகும்.
டிசம்பர் 5: பாங்க் ஆஃப் பரோடா, பாங்க் ஆஃப் இந்தியா விடுமுறை ஆகும்.

டிசம்பர் 6: கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா விடுமுறை ஆகும்.
டிசம்பர் 7: இந்தியன் வங்கி, யூகோ வங்கி விடுமுறை ஆகும்.

bank holidays , விடுமுறை நாட்கள்,வங்கி


டிசம்பர் 8: யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா விடுமுறை ஆகும்.
டிசம்பர் 11: அனைத்து தனியார் வங்கிகளும் மூடப்படும்.
பொதுவிடுமுறை நாட்கள்:
டிசம்பர் 1: மாநில தொடக்க நாள்/சுதேசி நம்பிக்கை தினம்
டிசம்பர் 4: புனித பிரான்சிஸ் சேவியரின் விழா
டிசம்பர் 12: பா-டோகன் நெங்மிஞ்சா சங்மா
டிசம்பர் 13 மற்றும் 14: Losoong/Namsoong
டிசம்பர் 18: U SoSo Tham இறந்த ஆண்டு
டிசம்பர் 19: கோவா விடுதலை நாள்
டிசம்பர் 25: கிறிஸ்துமஸ்
டிசம்பர் 26: கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
டிசம்பர் 27 மற்றும் 30: கிறிஸ்துமஸ் மற்றும் U Kiang Nangbah

வார இறுதி நாட்கள் விடுமுறை:

டிசம்பர் 3: ஞாயிறு
டிசம்பர் 9: 2-வது சனிக்கிழமை
டிசம்பர் 10: ஞாயிறு
டிசம்பர் 17: ஞாயிறு
டிசம்பர் 23:4-வது சனிக்கிழமை
டிசம்பர் 24: ஞாயிறு
டிசம்பர் 31: ஞாயிறு

Tags :