Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 2023-24ம் கல்வியாண்டிற்கான பள்ளி வேலை நாட்களின் விவரங்கள் வெளியீடு

2023-24ம் கல்வியாண்டிற்கான பள்ளி வேலை நாட்களின் விவரங்கள் வெளியீடு

By: vaithegi Thu, 03 Aug 2023 2:06:24 PM

2023-24ம் கல்வியாண்டிற்கான பள்ளி வேலை நாட்களின் விவரங்கள் வெளியீடு

சென்னை: 2023-24-ம் கல்வியாண்டில் 216 நாட்கள் பள்ளிகள் இயங்கும் ...தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் கூடுதல் வெயில் காரணத்தினால் கிட்டத்தட்ட 10 நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது வகுப்புகள் நடைபெற்று கொண்டு வருகிறது.

அந்த வகையில், 2023-24ம் கல்வியாண்டிற்கான வார இறுதி நாட்கள், அரசு விடுமுறை நாட்கள், விடுப்பு நாட்கள் உள்ளிட்ட அனைத்து பள்ளி வேலை நாட்களின் விவரங்களை பள்ளி கல்வித்துறை தற்போது வெளியிட்டுயிருக்கிறது. அதாவது, 2023-24 ஆம் கல்வி ஆண்டில் மொத்தமாக 216 பள்ளிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

schools,working days ,பள்ளிகள் ,வேலை நாட்கள்

மேலும், பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் 14 முதல் 27 வரை காலாண்டுத் தேர்வு நடைபெறும் என்றும், செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு தேர்விற்கான விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனையடுத்து, அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 11 முதல் 22 வரை நடைபெறும்.

அதைத்தொடர்ந்து டிசம்பர் 23 முதல் ஜனவரி 1 வரை காலாண்டு தேர்வுக்கான விடுமுறை எனவும் பட்டியலில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்ததாக, மூன்றாம் பருவத்தேர்வு ஏப்ரல் 18 முதல் 30 வரை நடைபெறும் எனவும், மே 1 முதல் மே 31 -ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags :