Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு மருத்துவமனைகளுக்கு நிபா வைரஸ் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

அரசு மருத்துவமனைகளுக்கு நிபா வைரஸ் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

By: vaithegi Thu, 14 Sept 2023 09:44:12 AM

அரசு மருத்துவமனைகளுக்கு நிபா வைரஸ் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: நிபா வைரஸ் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளில், “நோயுற்ற, வைரஸ் அறிகுறி உள்ளவர்களை கையாண்ட பின் 20 நொடிகள் சோப்பினால் கை கழுவிய பின் மற்ற பணிகளை சுகாதார ஊழியர்கள் செய்ய வேண்டும், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட சுகாதாரத் துறை ஊழியர்கள் பிபிஇ கிட், முகக்கவசம், கையுறை அணிவது அவசியம். மருத்துவ உபகரணங்களை தொடர்ச்சியாக கிருமி நீக்கம் செய்து பயன்படுத்துவது அவசியம்.

நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட சிரிஞ்ச் மற்றும் ஊசி போன்றவற்றை முறையாக அப்புறப்படுத்துவது அவசியம்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கேரளா மாநிலத்தில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் நிபா வைரஸ் பாதிப்பு முதன்முதலில் உறுதி செய்யப்பட்டது. அப்போது நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கபட்டு கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் 17 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து 2021-ம் ஆண்டு மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்தார்.

ethics,nipah virus,government hospital ,நெறிமுறைகள் , நிபா வைரஸ் ,அரசு மருத்துவமனை

இந்த நிலையில் அம்மாநிலத்தில் தற்போது மீண்டும் நிபா வைரஸ் பரவ துவங்கியுள்ளது . அதிலும் குறிப்பாக கோழிக்கோடு மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் உயிரிழந்து உள்ளார். இதையடுத்து அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கபட்டு மாநில ஆய்வகத்தில் ஆய்வு மேற்கொண்டத்தில் அவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யபட்டது.

அதைதொடர்ந்து அவரது மனைவி மற்றும் குழந்தைகளின் மாதிரிகள் சேகரிக்கபட்டு பூனேயில்ள்ள மத்திய ஆய்வகத்தில் அனுப்பிவைக்கபட்டு ஆய்வு மேற்கொண்டதில் அவர்களுக்கும் நிபா வைரஸ் பாதிக்கபட்டு உள்ளது. இதேபோன்று அதே மருத்துவமனையில் உள்நோயாளி ஒருவருடன் உடனிருந்த அவரது மகனும் நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கபட்டு உயிரிழந்ததையடுத்து கேரளா மாநிலத்தில் சுகாதாரத்துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். கேரளாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டதை அடுத்து தமிழ்நாட்டு எல்லைப் பகுதிகள் தீவிரமாகக் கண்காணிப்பு பணிகள் நடைபெறுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.


Tags :
|