Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மலைகள் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மலை சுழற்சிக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியீடு

மலைகள் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மலை சுழற்சிக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியீடு

By: vaithegi Sat, 18 June 2022 3:59:00 PM

மலைகள் உள்ள  பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மலை சுழற்சிக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியீடு

தமிழகம் : தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 13ம் தேதி 1 – 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா கால கட்டம் போல் இல்லாமல் வழக்கம் போல வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை மாணவர்களுக்கு புதிய கல்வித்திட்டங்களை அறிவித்து வருகிறது.

அந்த வகையில் தற்போது" எண்ணும் எழுதும் திட்டம் "கொண்டு வரப்பட்டுள்ளது. 1 – 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிதம் மற்றும் எழுத்து திறனை மேம்படுத்தும் வகையில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து வாசிப்பு பயிற்சி அளிக்க "ரீடிங் மாரத்தான் திட்டம்" நடைமுறைக்கு வந்துள்ளது.

மேலும், மேற்கண்ட திட்டங்கள் மூலம் மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த அரசு முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது மலை பகுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கட்டாயம் ஓராண்டு பணி புரிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு, தேனி,சேலம்,வேலூர், திண்டுக்கல், திருப்பத்தூர், தருமபுரி ஆகிய 7 மாவட்டங்களில் மலைகள் அதிகம் உள்ளன. இப்பகுதிகளில் 20 கல்வி ஒன்றியங்களும் உள்ளது.

school education,students teachers,20 education unions ,பள்ளிக்கல்வித்துறை ,மாணவர்கள் ஆசிரியர்கள் ,20 கல்வி ஒன்றியங்கள்

ஆசிரியர் மலைக்கு கீழ் பகுதியில் உள்ள சமவெளியில் பணிபுரிய விரும்புகின்றனர். யாரும் மலையின் மேல் பகுதிக்கு சென்று பணிபுரிய விரும்புவதில்லை. இந்த நிலையில் மலையின் மேல் பகுதியிலும் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் மலை சுழற்சிக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மலைப்பாங்கான இடங்களில் தொடக்கக்கல்வி இயக்கத்தின் கீழ் மலைப் பகுதிகளில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் குறைந்தது ஒராண்டு பணிபுரிய வேண்டும்.

மேலும் பதவி உயர்வு பணியிடங்களில் காலியிடங்களை முதலில் மலைப் பகுதிக்கு வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :