Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் சொத்து வரி, தொழில் வரி செலுத்தாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியீடு

தமிழகத்தில் சொத்து வரி, தொழில் வரி செலுத்தாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியீடு

By: vaithegi Sat, 03 Sept 2022 4:46:28 PM

தமிழகத்தில் சொத்து வரி, தொழில் வரி செலுத்தாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியீடு

சென்னை: இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசின் 15வது நிதி ஆணையத்தின் நிபந்தனையின் அடிப்படையில் தமிழகத்தில் சொத்து வரி, தொழில் வரி உயர்வு குறித்து அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
எனவே அதன்படி, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 600 சதுர அடிக்குக் குறைவான குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவிகிதமும், 600 முதல் 1,200 சதுர அடி வரை உள்ள குடியிருப்புகளுக்கு 75 சதவிகிதமும், 1,201 முதல் 1,800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்புகளுக்கு நூறு சதவிகிதமும் சொத்து வரி உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதை அடுத்து இந்த நிலையில் இந்த மாத இறுதிக்குள் சொத்து வரி, தொழில் வரி இந்த மாதத்திற்குள் செலுத்தாவிட்டால் அவர்கள் மீது அபராத நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

property tax,business tax ,சொத்து வரி, தொழில் வரி

தமிழகத்தில் சொத்து வரி ஆண்டுக்கு இருமுறை அரையாண்டு வீதம் வசூலிக்கப்படுகிறது. மேலும் சொத்து வரி உயர்வு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வரி உயர்வின் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.1200 கோடி லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து சொத்து வரியை வசூலிக்க வருவாய் துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து கொண்டு வருகின்றனர்.

மேலும் தமிழகத்தில் புதிய சொத்து வரி மட்டுமல்லாமல் ஏற்கனவே செலுத்தாமல் நிலுவையில் உள்ள சொத்து வரியையும் செலுத்த உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. எனவே அதன்படி இந்த மாத இறுதிக்குள் வரி செலுத்தாதவர்கள் மீது அபராத நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags :