Advertisement

மத்திய மந்திரிகளின் சொத்து விவரம் வெளியீடு

By: Karunakaran Fri, 16 Oct 2020 2:57:03 PM

மத்திய மந்திரிகளின் சொத்து விவரம் வெளியீடு

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் சொத்து பட்டியல் தெரிய வந்துள்ளது. நடப்பு ஆண்டு ஜூன் 30-ந்தேதி நிலவரப்படி அவரது நிகரச்சொத்து மதிப்பு ரூ.28 கோடியே 63 லட்சம் ஆகும். கடந்த ஆண்டு இது ரூ.32 கோடியே 30 லட்சமாக இருந்தது. தற்போது சொத்து மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம், பங்குச்சந்தையின் வீழ்ச்சிதான் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அமித்ஷாவுக்கு குஜராத்தில் 10 அசையும் சொத்துகள் உள்ளன. இவருடைய சொத்துகள் மற்றும் தாய் வழி வந்த பரம்பரை சொத்துகள் ரூ.13 கோடியே 56 லட்சம் மதிப்பிலானவை.

அமித்ஷாவுக்கு மரபுரிமையாக வந்த பங்குகள் ரூ.12 கோடியே 10 லட்சம், சொந்தமாக வைத்துள்ள பங்குகள் ரூ.1.4 கோடி. நடப்பு ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி அவற்றின் மொத்த மதிப்பு ரூ.13.5 கோடி. கடந்த ஆண்டு இது ரூ.17.9 கோடியாக இருந்தது. மேலும், அமித்ஷாவுக்கு ரூ.15.77 லட்சம் கடன்கள் உள்ளன. அமித் ஷாவின் மனைவி சோனல் சொத்து மதிப்பு ரூ.9 கோடியில் இருந்து ரூ.8.53 கோடியாக குறைந்துள்ளது.

property details,union ministers,amth shah,piyush goyal ,சொத்து விவரங்கள், மத்திய அமைச்சர்கள், அம்த் ஷா, பியூஷ் கோயல்

இதே போன்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத், ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், ஸ்மிரிதி இரானி ஆகியோரின் சொத்து விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. மந்திரிகளில் ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் பெரும்பணக்காரர்களில் ஒருவர் ஆவார். அவரிடம் ரூ.27.47 கோடி, அவரது மனைவி சீமா கோயலிடம் ரூ.50.34 கோடி, எச்.யு.எப். என்னும் ஒன்றுபட்ட இந்து குடும்ப சொத்து ரூ.45.65 லட்சம் என மொத்த சொத்து மதிப்பு ரூ.78.27 கோடி ஆகும்.

கடந்த கால நிதிமந்திரிகளுடன் ஒப்பிடுகையில் தற்போதைய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் குறைவான சொத்துகளே உள்ளன. இவர் கணவருடன் சேர்ந்து ரூ.99.36 லட்சம் குடியிருப்பு, ரூ.16.02 லட்சம் விவசாயம் சாரா நிலம் வைத்துள்ளார். இவரிடம் கார் இல்லை. ஒரு பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டர் வைத்துள்ளார். 19 வருட வீட்டுக்கடன், 10 வருட அடமானக்கடன் உள்ளது.

Tags :