Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக அரசு ஊழிகள் அதிகபட்சமாக எத்தனை நாட்கள் விடுப்பு எடுக்கலாம் .. பட்டியல் வெளியீடு

தமிழக அரசு ஊழிகள் அதிகபட்சமாக எத்தனை நாட்கள் விடுப்பு எடுக்கலாம் .. பட்டியல் வெளியீடு

By: vaithegi Sun, 19 Mar 2023 11:21:34 AM

தமிழக அரசு ஊழிகள் அதிகபட்சமாக எத்தனை நாட்கள் விடுப்பு எடுக்கலாம்  ..  பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் எந்தெந்த நிகழ்விற்கு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்றும், எத்தனை நாட்கள் விடுப்பு எடுக்கலாம் என்பது குறித்தான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, கொரோனா ஆகியவற்றால் தனிமைப்படுத்த நேரிட்டால் அதிகபட்சம் 21 நாள் வரைக்கும் விடுப்பு எடுக்கலாம்.

இதனை அடுத்து வீட்டில் யாருக்கேனும் தொற்று நோய் ஏற்பட்டிருந்தால் அல்லது ஊழியருக்கு தொற்றுநோய் ஏற்பட்டிருந்தால் அதிகபட்சம் 21 நாள் வரைக்கும் விடுப்பு எடுக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

dates,list,tamil government jobs ,நாட்கள் ,பட்டியல் ,தமிழக அரசு ஊழிகள்

அதைத்தொடர்ந்து அம்மை, தட்டம்மை போன்ற பரவ கூடிய நோய்கள் ஏற்பட்டால் 7 நாள் வரைக்கும் விடுப்பு எடுக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பன்றி காய்ச்சல் ஏற்பட்டால் 7 முதல் 10 நாள் வரையும், பிளேக் நோய்க்கு 10 நாள் வரையும், ரேபிஸ் நோய்க்கு 10 நாள் வரையும் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது மட்டுமல்லாமல் புற்றுநோய் மருத்துவத்திற்கு 10 நாட்கள் வரை விடுப்பு எடுக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் தமிழக அரசு இது போன்ற பல விடுப்பு குறித்தான ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.

Tags :
|
|