Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக தமிழக அரசு குறைந்தபட்ச செயல்திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை வெளியீடு

எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக தமிழக அரசு குறைந்தபட்ச செயல்திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை வெளியீடு

By: vaithegi Thu, 30 June 2022 7:31:02 PM

எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக தமிழக அரசு குறைந்தபட்ச செயல்திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை வெளியீடு

தமிழம்: தமிழகத்தில் 2020ம் ஆண்டு 1ம் வகுப்பில் சேர்ந்த குழந்தைகளுக்கு கடந்த ஆண்டு மிக தாமதமாக கல்வி ஆண்டு தொடங்கப்பட்டது. அதனால் அவர்கள் 2ம் வகுப்பு படிக்காமலேயே நேரடியாக 3ம் வகுப்புக்குள் அடி எடுத்து வைத்துள்ளனர். இதனால் இந்த குழந்தைகளிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை பள்ளிகள் சரி செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

கடந்த கொரோனா கால கட்டத்தில் ஆன்லைன் வழியில் வகுப்புகள் நடைபெற்றாலும் கிராமங்களில் உள்ள குழந்தைகளால் பாடங்களை கவனிக்க முடியாத நிலை இருந்தது. மேலும் இதில் ஸ்மார்ட்போன், கணினி உள்ளிட்ட வசதிகள் இல்லாத குடும்பங்களின் குழந்தைகளுக்கும் ஆன்லைன் வழியில் பாடங்களை கவனிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

அதனால் இவர்களின் கற்றல் இழப்பு சரி செய்யும் விதமாக நடப்பு கல்வியாண்டு முதல் ” எண்ணும் எழுத்தும் திட்டம் ” என்ற திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இத்திட்டம் 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது.

counting and writing,school education ,எண்ணும் எழுத்தும்,பள்ளிக்கல்வித்துறை

மேலும் இந்த திட்டம் தொடர்பாக தமிழக அரசு குறைந்தபட்ச செயல்திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது, 2025 ஆண்டுக்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கிடைத்து விட வேண்டும் என்பதே எண்ணும் எழுத்தும் திட்டத்தின் நோக்கமாக உள்ளது.

அத்துடன் இத்திட்டம் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், மகிழ்ச்சியான கல்விச் சூழலை உருவாக்கவும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை வாயிலாக அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.

Tags :