Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொது இடங்களில் போராட்டம் நடத்துபவர்களுக்கு புதுச்சேரி கலெக்டர் எச்சரிக்கை

பொது இடங்களில் போராட்டம் நடத்துபவர்களுக்கு புதுச்சேரி கலெக்டர் எச்சரிக்கை

By: Nagaraj Mon, 29 June 2020 11:22:26 AM

பொது இடங்களில் போராட்டம் நடத்துபவர்களுக்கு புதுச்சேரி கலெக்டர் எச்சரிக்கை

பொது இடங்களில் போராட்டம் நடத்தினால் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அருண் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதனடிப்படையில், மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு ஆணைகள் பிறப்பித்தது. இந்நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தைக் கவனத்தில் கொண்டு, ஏற்கனவே அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அரசு அறிவித்தது.

warning,puducherry,struggle,collector,public places ,எச்சரிக்கை, புதுச்சேரி, போராட்டம், கலெக்டர், பொது இடங்கள்

இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, அமைப்புகள் முன் அனுமதியின்றி தர்ணா மற்றும் போராட்டம் போன்றவைகளில் ஈடுபட்டு வருகின்றன. இத்தகைய செயல்கள், பேரிடர் மேலாண்மைச் சட்டம் மற்றும் தொற்று நோய் சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

எனவே, சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும், தளர்வுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள இந்த காலகட்டத்தில் போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டம் போன்றவைகளை பொது இடங்களில் நடத்துவதை தவிர்க்க வேண்டும். மீறினால், பேரிடர் மேலாண்மைச் சட்டம் மற்றும் தொற்று நோய் சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :