Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீபாவளி .. பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் வழங்கி உள்ளது புதுச்சேரி அரசு

தீபாவளி .. பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் வழங்கி உள்ளது புதுச்சேரி அரசு

By: vaithegi Fri, 14 Oct 2022 7:02:05 PM

தீபாவளி   ..  பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் வழங்கி உள்ளது புதுச்சேரி அரசு

புதுச்சேரி: பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் ... தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ஆம் தேதி தமிழகம் உட்பட நாடு முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இதனை அடுத்து இந்த நிலையில் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணியிலிருந்து 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் மற்றும் சரவெடிகள் வெடிப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு புதுச்சேரி அரசு தரப்பில் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க இதே நேரம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், புதுச்சேரியில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது

puducherry government,fireworks , புதுச்சேரி அரசு,பட்டாசு

இதைத்தொடர்ந்து அதிக ஒலி எழுப்பும் வெடிகள் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கும் சரவெடி பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடுக்கு தடை விதிக்கப்படுகிறது

மேலும் தீபாவளி அன்று காலை 6 - 7 மணி, இரவு 7 - 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என புதுச்சேரி கலெக்டர் வல்லவன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

Tags :