Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மீண்டும் அரசியலுக்கு வருகிறாரா புதுச்சேரி ஆளுநர் தமிழிசை

மீண்டும் அரசியலுக்கு வருகிறாரா புதுச்சேரி ஆளுநர் தமிழிசை

By: Nagaraj Sat, 25 June 2022 11:49:21 PM

மீண்டும் அரசியலுக்கு வருகிறாரா புதுச்சேரி ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி: ஆளுநராகிவிட்ட போதும் தனக்கு கட்சி அரசியலில் உள்ள ஆர்வம் இன்னமும் குறையவில்லை’ என்றும் சொல்லிவந்திருக்கிறார். தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தராஜன் திடீரென 2019 செப்டம்பர் 1 ஆம் தேதி தெலங்கானா மாநில ஆளுநராக குடியரசுத் தலைவர் அலுவலகத்தால் அறிவிக்கப்பட்டார்.


தீவிர அரசியலில் இருந்த தமிழிசை திடீரென அரசியலமைப்பு பதவியான ஆளுநராக நியமிக்கப்பட்டதை அவரது ஆதரவாளர்களும், அபிமானிகளும் கூட எதிர்பார்க்கவில்லை. பிறகு கூடுதலாக புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார் தமிழிசை.

ஆளுநராக இருந்தபோதும் அங்கேயும் மக்களுடனான தனது நெருக்கத்தைக் குறைத்துக் கொள்ளாத தமிழிசை பல்வேறு மக்கள் விழாக்களில் பங்கேற்று வருகிறார். மேலும் தமிழக பாஜகவில் தமிழிசையின் ஆதரவாளர்கள் பலர் இன்னமும் முக்கிய நிர்வாகிகளாக இருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் நண்பர்களிடம் பேசும் தமிழிசை, ‘ஆளுநராகிவிட்ட போதும் தனக்கு கட்சி அரசியலில் உள்ள ஆர்வம் இன்னமும் குறையவில்லை’ என்றும் சொல்லி வந்திருக்கிறார்.

இந்தப் பின்னணியில்தான் தமிழிசை தன் அடுத்த இன்னிங்ஸ் அரசியலை ஆட ஆரம்பிக்கும் காலம் நெருங்கி வருகிறது என்கிறார்கள் டெல்லி பாஜக சோர்ஸுகள்.

“தமிழிசை சௌந்தர்ராஜன் தெலங்கானாவில் அம்மாநில முதல்வரால் கடுமையாக எதிர்க்கப்படுகிறார். ஆனபோதும் அம்மாநிலத்தில் ஆளுநரின் செயல்பாடுகள் மக்களை நோக்கி சிறப்பாக இருப்பதாக பிரதமர் மோடி கருதுகிறார். மேலும் ஆளுநர் பணியில் இருக்கும்போதே குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியால் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற அளவுக்கு பரிசீலனைப் பட்டியலில் இருந்தவர்.


இவருடைய செயல்பாடுகளைப் பார்த்து பிரதமர் மோடியின் அமைச்சரவையில் ஸ்மிருதி இரானியை போல ஓர் உயர்ந்த இடத்தைக் கொடுக்கலாமா என்ற ஆலோசனையும் டெல்லி மேலிடத்தில் நடந்து வருகிறது. கேபினெட்டில் இடம் அல்லது அந்த அந்தஸ்துக்கு இணையான மத்திய அரசின் வேறு ஏதாவது கமிஷன் தலைவர் என்ற பேச்சு கடந்த சில நாட்களாக டெல்லி டாப் லெவலில் தமிழிசையின் பெயர் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது” என்கிறார்கள்.

Tags :