Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இடஒதுக்கீடு உறுதி ...ஆளுநர் அறிவிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இடஒதுக்கீடு உறுதி ...ஆளுநர் அறிவிப்பு

By: vaithegi Fri, 01 Sept 2023 5:28:37 PM

புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இடஒதுக்கீடு உறுதி  ...ஆளுநர் அறிவிப்பு

புதுச்சேரி : அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இடஒதுக்கீடு .... நாடு முழுவதும் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 13ஆம் தேதி வெளியான நிலையில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

இதனை அடுத்து நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அகில இந்திய மற்றும் மாநிலக் குறுக்கீடு அடிப்படையில் மாணவர்களுக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு கொண்டு வருகிறது. மேலும், தற்போது வரையிலும் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு துவங்கப்படாத நிலையில் மாணவர்கள் கலந்தாய்விற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

governor,government school students,puducherry ,ஆளுநர் ,அரசு பள்ளி மாணவர்கள் ,புதுச்சேரி

இந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வரையிலும் இந்த அறிவிப்பிற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்காத நிலையில் புதுச்சேரியில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நடப்பதில் தாமதம் ஏற்பட்டு கொண்டு வருகிறது.

இதையடுத்து, கட்டாயமாக புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவ படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உறுதி அளித்துள்ளார்.

Tags :