Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுச்சேரி ,காரைக்காலில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு படிப்படியாக குறைந்துவரும் நிலையில் பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு

புதுச்சேரி ,காரைக்காலில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு படிப்படியாக குறைந்துவரும் நிலையில் பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு

By: vaithegi Mon, 26 Sept 2022 09:44:29 AM

புதுச்சேரி ,காரைக்காலில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு படிப்படியாக குறைந்துவரும் நிலையில் பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு

புதுச்சேரி : புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு வாரத்திற்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது. புதுச்சேரியில் காய்ச்சல் காரணமாக குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 17ஆம் தேதி முதல் நேற்று வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

புதுச்சேரியில் காய்ச்சல் குறையாமல் பரவி வந்த நிலையில், பன்றி காய்ச்சல் பாதிப்பும் இருந்து வந்தது. எனவே இதன் காரணமாக ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை படித்து வந்த மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டன.

puducherry,schools,opening ,புதுச்சேரி ,பள்ளிகள் ,திறப்பு

இதனை அடுத்து இந்த நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு வாரத்திற்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது. வைரஸ் காய்ச்சால் பரவல் காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. வைரஸ் காய்ச்சல் பாதிப்பு படிப்படியாக குறைந்துவரும் நிலையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் திட்டமிட்டபடி காலாண்டு தேர்வு இன்று முதல் தொடங்கும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். வரும் 30ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் நிலையில் அதன் பின் ஒரு வார விடுமுறை அளிக்கப்பட்டு, அக்டோபர் 6ம் தேதி 2-ம் பருவத்திற்கு பள்ளிகள் திறக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

Tags :