Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த தேதி கூடுகிறது

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த தேதி கூடுகிறது

By: vaithegi Mon, 11 Sept 2023 10:17:17 AM

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த தேதி கூடுகிறது


புதுச்சேரி : புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் செல்வம் தெரிவித்ததாவது, “புதுச்சேரி அரசின் 15-வது சட்டப்பேரவையிலன் 4-வது கூட்டத்தொடரின் 2-ம் பகுதி செப்டம்பர் மாதம் 20-ம் தேதி காலை 9.30 மணிக்கு கூட்டப்படுகிறது, அன்று சட்டப்பேரவை கூட்டம் எத்தனை நாள் நடத்துவது என்று அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு செய்யப்படும். புதிய சட்டப்பேரவை கட்ட ரூ.612 கோடி திட்டமிடப்பட்டு உள்ளது.

இதையடுத்து ஒரு மாதத்தில் டெண்டர் கோரப்படும். டிசம்பர் மாதம் பூமி பூஜை நடத்தப்படும். 2 வருடங்களில் கட்டி முடிக்கப்பட்டு எங்களது கூட்டணி கட்சி தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமி தலைமையில் திறந்து வைக்கப்படும்

legislative assembly session,puducherry ,புதுச்சேரி ,சட்டப்பேரவை கூட்டத்தொடர்


கடலோர கிராமங்களில் நிலத்தடியில் மின் புதைவடம் கேபிள் புதைக்க மத்திய அரசு நிதியில் 11 கோடி ரூபாயில் 2 கோடி தான் செலவிடப்பட்டது. இதிலும் ஊழல் நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உத்தரவிடுவேன். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி இருக்கும் போதே மாநில அந்தஸ்து பெறுவோம்.

அந்த நம்பிக்கை உள்ளது, இந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி கொண்டு வருகிறது. அதிகாரிகள் செய்த சிறு தவறால் கேஸ் மானியம் வழங்கப்படாமல் இருந்தது. அது இப்போது சரி செய்யப்பட்டது. 2 தினங்களில் அந்த மானியம் செலுத்தப்படும்” என அவர் கூறினார்.

Tags :