Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுச்சேரியில் பள்ளிகளுக்கு வரும் டிச.4 ம் தேதி விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு வரும் டிச.4 ம் தேதி விடுமுறை அறிவிப்பு

By: vaithegi Sat, 02 Dec 2023 10:34:56 AM

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு வரும் டிச.4 ம் தேதி விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி: அந்தமான் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையம் வங்க கடல் பகுதியில் இன்று உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றதை தொடர்ந்து புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் மிதமான மழை பெய்து வந்தது. தற்போது திடீரென்று 2 மணி நேரத்திற்கு மேலாக தொடங்கிய கனமழை பல்வேறு பகுதிகளில் பெய்து கொண்டு வருகிறது.

இதையடுத்து இந்த மழையானது காரைக்கால் நகரப்பகுதிகள் மற்றும் திருநள்ளாறு, திருப்பட்டினம், அம்பகரத்தூர், கோட்டுச்சேரி, நிரவி, நெடுங்காடு உள்ளிட்ட பல புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து கொண்டு வருகிறது. தொடரும் கனமழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

holiday,puducherry ,விடுமுறை ,புதுச்சேரி


மேலும் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சூழ்நிலை காணப்பட்டு வருகிறது. இதற்கு இடையே வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் வருகிற டிசம்பர் 4ஆம் தேதியன்று கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மாநிலத்திலும், அதன் பிராந்தியங்களான காரைக்கால் மற்றும் ஏனாமில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வருகிற டிச.4 ம் தேதி விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Tags :