Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுச்சேரியில் பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்

புதுச்சேரியில் பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்

By: vaithegi Tue, 11 Apr 2023 12:50:11 PM

புதுச்சேரியில் பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்

புதுச்சேரி: இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி கொண்டு வருகிறது. அதனால் பல்வேறு மாநில அரசுகள் கொரோனா கட்டுப்பாடுகள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். தமிழகத்தில் மருத்துவமனைகளில் வரும் நோயாளிகள், மருத்துவர்கள் பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து புதுச்சேரியில் கடந்த 15 நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி கொண்டு வருகிறது. அதனால் பொது இடங்களிலும் பள்ளிகளிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

masks,students ,முகக்கவசம் ,மாணவர்கள்

இதையடுத்து இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பின் படி, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதனால் நேற்று பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் முகக்கவசம் அணிந்து வந்தனர். அவ்வாறு அணியாதவர்களுக்கு ள்ளிகளில் முகக்கவசம் வழங்கப்பட்டது. மேலும் 10 -ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து தேர்வு எழுத அறைக்கு வர வேண்டும் என பள்ளி நிர்வாகம் அறிவித்த நிலையில், மாணவர்கள் முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு வந்தனர்.

Tags :
|