Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுச்சேரி மாநிலத்தில் அடுத்த 3 மாதங்களுக்கு மின்கட்டணம் அதிகரிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் அடுத்த 3 மாதங்களுக்கு மின்கட்டணம் அதிகரிப்பு

By: vaithegi Mon, 02 Oct 2023 2:44:50 PM

புதுச்சேரி மாநிலத்தில் அடுத்த 3 மாதங்களுக்கு மின்கட்டணம் அதிகரிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்கள் மட்டும் மின்கட்டணம் உயர்வு ... கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அடிப்படையில் புதுச்சேரி மாநிலத்தில் மின்கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு கொண்டு வருகிறது.

இந்தாண்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் கொள்முதல் விலை உயர்வை ஈடு செய்யும் பொருட்டு புதுச்சேரி மாநிலத்தில் மின்துறை கூடுதல் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளது.அதாவது, வீடுகளுக்கு 100 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 25 பைசா கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

electricity bill,puducherry ,மின்கட்டணம் ,புதுச்சேரி

மேலும் 101 முதல் 200 யூனிட் வரையிலான யூனிட்டுக்கு 36 பைசாவும், 201 யூனிட் முதல் 300 வரையிலான யூனிட்டுக்கு 40 பைசாவும், 300 யூனிட்டுக்கு மேல் 40 பைசாவும் கூடுதலாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதே போன்று, வர்த்தக மின் கட்டணமும், குடிசை தொழிலுக்கான மின்கட்டணமும் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த மின்கட்டண உயர்வு அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்கள் வசூல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :