Advertisement

புதுச்சேரியில் தியாகிகளை கவுரவிக்கும் விழா

By: Nagaraj Wed, 17 Aug 2022 6:14:21 PM

புதுச்சேரியில் தியாகிகளை கவுரவிக்கும் விழா

புதுச்சேரி: தியாகிகளை கவுரவிக்கும் விழா.. புதுவை செய்தி விளம்பரத்துறை சார்பில் சுதந்திர தினத்தையொட்டி தியாகிகளை கவுரவிக்கும் விழா கம்பன் கலையரங்கில் நடந்தது.

விழாவுக்கு அனிபால்கென்னடி எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். முதல்-அமைச்சர் ரங்கசாமி தியாகிகளுக்கு பழங்கள் அடங்கிய தொகுப்பு, மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை வழங்கி கவுரவித்தார். பின்னர் அவர் பேசியதாவது:- தியாகிகள் போரடியதால்தான் 75 ஆண்டாக சுதந்திரமாக வாழ்கிறோம். சுதந்திரம் பெற்ற பிறகு நாடும், மாநிலமும் எவ்வளவு வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

உலகம் வியக்கும் அளவுக்கு நம் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. இது மேலும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதே நம் எண்ணம். புதுவை சிறிய மாநிலமாக இருந்தாலும், அனைத்து துறைகளிலும் சிறந்த மாநிலமாக திகழ்கிறது. ஆண்டுதோறும் ஏராளமான மருத்துவம், பொறியியல் பட்டங்களை மாணவர்கள் பெறுகின்றனர். பலர் வெளிநாடுகளில் பணியில் உள்ளனர். கல்வி, மருத்துவத்துக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

martyrs,honor,officers,manipatta,demand,action ,தியாகிகள், கௌரவிப்பு, அதிகாரிகள், மனைப்பட்டா, கோரிக்கை, நடவடிக்கை

அனைத்து தரப்பு மக்களும் முன்னேற்றம் அடையும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தியாகிகளுக்கு ரூ.15 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதை உடனடியாக உயர்த்த முடியாது. சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் விரிவாக ஆலோசனை நடத்தி ஓய்வூதியம் உயர்த்துவது உட்பட பல முடிவுகள் எடுக்கப்படும். தியாகிகளின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கலெக்டர் வல்லவன், செய்தித்துறை இயக்குனர் தமிழ்செல்வன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். விழாவில் 10 தியாகிகளுக்கு மிக்ஸி, கிரைண்டர் வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு இன்று முதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆயிரத்து 418 தியாகிகள் பயனடைவர்.

Tags :
|
|