Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தடுப்பு மருந்தை வினியோகிக்க முழு வீச்சில் தயார் - புனே மாவட்ட நிர்வாகம்

கொரோனா தடுப்பு மருந்தை வினியோகிக்க முழு வீச்சில் தயார் - புனே மாவட்ட நிர்வாகம்

By: Karunakaran Sat, 07 Nov 2020 2:42:53 PM

கொரோனா தடுப்பு மருந்தை வினியோகிக்க முழு வீச்சில் தயார் - புனே மாவட்ட நிர்வாகம்

உலகில் பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணியில் இறுதி கட்டத்தில் உள்ளன. இதனால், இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கொரோனா தடுப்பு மருந்து சந்தைக்கு வந்தவுடன் அதை பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய புனே மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.

கொரோனா தடுப்பு மருந்தை, கொரோனா தடுப்பு மருந்து நிர்வாக தேசிய வல்லுனர் குழுவுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் வழங்க உள்ளது. இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், சுகாதாரப்பணியாளர்கள், நர்ஸ், டாக்டர்கள், லேப் டெக்னீசியன்ஸ், வார்டு பாய்ஸ், நிர்வாக ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள், டிரைவர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், ஆஸ்பத்திரி காவலர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பு மருந்து கிடைக்க முன் உரிமை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

pune,corona vaccine,india,corona virus ,புனே, கொரோனா தடுப்பூசி, இந்தியா, கொரோனா வைரஸ்

இது குறித்து மாவட்ட கலெக்டர் ராஜேஷ் தேஷ்முக் கூறுகையில், புனே மாவட்டத்தில் சுமார் 1.10 லட்சம் முன்கள பணியாளர்கள் உள்ளனர். அவர்களின் விவரங்களை சேகரித்து வருகிறோம். இதுகுறித்த தகவல்கள் கொரோனா தடுப்பு மருந்து பயனாளர்கள் மேலாண்மை தளத்தில் பதிவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர், மருந்துக்கடைகாரர்கள், பிசியோதெரபிஸ்ட், ரேடியோகிராபர்ஸ், அறிவியல் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பு மருந்து வழங்க முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறினார்.

Tags :
|
|