Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனா- ரஷ்யா இடையிலான உறவுகள் புதிய எல்லையை எட்டியிருப்பதாக புடின் பெருமிதம்

சீனா- ரஷ்யா இடையிலான உறவுகள் புதிய எல்லையை எட்டியிருப்பதாக புடின் பெருமிதம்

By: Nagaraj Fri, 24 Feb 2023 11:20:07 AM

சீனா- ரஷ்யா இடையிலான உறவுகள் புதிய எல்லையை எட்டியிருப்பதாக புடின் பெருமிதம்

ரஷ்யா: புதிய எல்லைகள் எட்டப்பட்டுள்ளது... சீனா மற்றும் ரஷ்யாவிற்கிடையிலான உறவுகள் ‘புதிய எல்லைகளை’ எட்டியிருப்பதாகவும், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்குடனான உச்சிமாநாட்டை உறுதி செய்திருப்பதாகவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி விளாடிமிர் புடின் சீனாவின் உயர்மட்ட இராஜதந்திரி வாங் யீயுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கருத்து தெரிவிக்கையிலேயே புடின் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது, இரு நாடுகளின் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தைப் புடின் பாராட்டினார்.

சர்வதேச பதற்றங்கள் அதிகரித்துள்ளதைக் குறிப்பிட்டு, புடின், இந்த சூழலில், உலக அரங்கில் சீன மக்கள் குடியரசு மற்றும் ரஷ்ய கூட்டமைப்பு இடையேயான ஒத்துழைப்பு சர்வதேச சூழ்நிலையை ஸ்திரப்படுத்துவதற்கு மிகவும் முக்கியமானது என்று கூறினார்.

russia,foreign minister,china,new frontiers,putin,project ,ரஷ்யா, வெளியுறவு அமைச்சர், சீனா, புதிய எல்லைகள், புடின், திட்டம்

ரஷ்யா மற்றும் சீனா இரண்டும் சர்வதேச உறவுகளின் பன்முனை மற்றும் ஜனநாயகமயமாக்கலை ஆதரிக்கின்றன என்று வாங் வலியுறுத்தினார். சீன- ரஷ்ய உறவுகள் எந்த மூன்றாம் நாட்டிற்கும் எதிரானது இல்லை, நிச்சயமாக எந்த மூன்றாம் நாடுகளின் அழுத்தத்திற்கும் உட்படுத்த முடியாது என்று அவர் மேலும், கூறினார்.

ரஷ்யாவின் போருக்கு சீனா ஆயுதங்கள் அல்லது பிற ஆதரவை வழங்கக்கூடும் என்று அமெரிக்காவும் நேட்டோவும் சமீபத்தில் கவலை தெரிவித்தன. இருப்பினும் சீனா அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்று மறுத்துள்ளது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த வெளியுறவுக் கொள்கை அதிகாரியான வாங் வாங், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் நிதானமாக நடப்பதைக் காட்டும் படமும் வெளியாகியது.

Tags :
|
|
|