Advertisement

சூடான் மக்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பிய கத்தார்

By: Nagaraj Sat, 06 May 2023 09:39:05 AM

சூடான் மக்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பிய கத்தார்

கத்தார்; நிவாரண பொருட்கள் வழங்கல்... சூடானில் உள்நாட்டு மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக கத்தார் அரசு, நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.

முதற்கட்டமாக சுமார் 40 டன் உணவு பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், கத்தார் தலைநகர் தோகாவில் உள்ள ராணுவ தளத்தில் இருந்து சரக்கு விமானம் மூலம் சூடானுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

sudan,relief,stranded,people,qatar ,சூடான், நிவாரணம், சிக்கி தவிப்பு, மக்கள், கத்தார்

சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவப்படைக்கும் இடையேயான மோதல் தொடருவதால், அங்கு சிக்கித்தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் பல்வேறு நாடுகளும் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன.

சூடானில் உள்ள அமெரிக்கர்கள் வெளியேறும்படி அந்நாடு தன் குடிமக்களை கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. மோதல் தீவிரமடைந்து வருவதால் அங்குள்ள தங்கள் நாட்டு குடிமக்களை மீட்கும் பணிகளை பல்வேறு நாடுகளும் மேற்கொண்டுள்ளன.

Tags :
|
|
|