கத்தார் மேற்கொண்ட சமாதான முயற்சி... அமெரிக்கா – ஈரான் கைதிகளை மாற்றிக் கொண்டன
By: Nagaraj Tue, 19 Sept 2023 7:30:56 PM
கத்தார்: கத்தாரின் சமாதான முயற்சியால் அமெரிக்காவும் ஈரானும் கைதிகளை மாற்றிக் கொண்டனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஈரானிய எண்ணெய் பணம் 6 பில்லியன் டாலர் முடக்கப்பட்ட தொகையை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக் கொண்டதையடுத்து அமெரிக்க கைதிகளை விடுவிக்க ஈரான் சம்மதம் தெரிவித்தது.
பத்தாண்டுகளாக ஈரான் சிறையில் இருந்த 5 அமெரிக்க கைதிகள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் விடுவிக்கப்பட்டு கத்தார் ஜெட் விமானம் மூலம் தெஹ்ரானில் இருந்து தோகாவுக்குஅழைத்து வரப்பட்டனர்.
அதே போன்று 5 ஈரான் கைதிகளையும் அமெரிக்கா விடுதலை செய்தது. அவர்களும் விமானம் மூலம் டோகா சென்றடைந்தனர்.
Tags :
released |
iran |