Advertisement

கட்டுப்பாடுகளை தளர்த்த கியூபெக் அரசாங்கம் தீர்மானம்

By: Nagaraj Wed, 17 June 2020 5:30:42 PM

கட்டுப்பாடுகளை தளர்த்த கியூபெக் அரசாங்கம் தீர்மானம்

கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானம்... நடைமுறையில் உள்ள சில முக்கிய முடக்கநிலை கட்டுப்பாடுகளை தளர்த்த, கியூபெக் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை உடல் ரீதியான தூரவிலகல் வழிகாட்டுதல்கள்களை கியூபெக் அரசாங்கம் தளர்த்தவுள்ளது. மேலும், 50பேர் வரை உட்புறக் கூட்டங்கள் அனுமதிக்கப்படும்.


health officials,school,regulations,relaxation,teachers ,சுகாதார அதிகாரிகள், பாடசாலை, கட்டுப்பாடுகள், தளர்வு, ஆசிரியர்கள்

உட்புறக் கூட்டங்களில் பங்கேற்கும் நபர்கள் முந்தைய வழிகாட்டுதலின்படி இரண்டு மீட்டர் தூரத்திலிருந்து தற்போதைய 1.5 மீட்டர் தூரத்தை வைத்திருக்கலாம் என்று பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

16 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகள் ஒரு வகுப்பறையில், அல்லது வெளியில், நாள் முகாம்களில் இருப்பது போன்ற உட்புறங்களில் இருந்தாலும், ஒரு மீட்டர் தூரத்தில் உடல் விலகியிருக வேண்டுமென்பதை பராமரிக்க வேண்டும்.

பாடசாலைகளில், குழந்தைகள் தங்கள் ஆசிரியர்களிடமிருந்து இரண்டு மீட்டர் தூரத்தை பராமரிக்க வேண்டும் என்றும் பொது சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags :
|